ராமநாதபுரம்: ராமநாதசுவாமி திருக்கோவிலில் 29.01.2025 தை 16ம்தேதி பதன்கிழமை, தை அமாவாசை தீர்த்த உற்சவம், பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல், இரவு வெள்ளி ரதம் புறப்பாடு நடைபெறும். அதிகாலை 4 மணிக்கு நடைதிறந்து காலை 5 மணிமுதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். தொடர்ந்து பூஜா காலங்கள் சாயரட்சை பூஜை வரை நடைபெற்று காலை 11.00 மணிக்கு மேல் ஸ்ரீராமர் சகிதம் பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி பகல் 11.50 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடைபெறும். மாலை 5.30 மணிக்கு மண்டகப்படியில் தீபாராதனை நடைபெற்று இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் பஞ்சமூர்த்திகள் மற்றும் ஸ்ரீராமர் வெள்ளிரதம் புறப்பாடு வீதி உலா நடைபெறும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு appeared first on Dinakaran.