சென்னை: சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெறும் தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா சார்பில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தென்மாநில எம்.பி.க்கள் குழுவை அமைக்க முடிவெடுக்கப்பட்டது.