சென்னை: மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக, தமிழக அரசு சாா்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று காலை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 63 கட்சிகள் அழைக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் பங்கேற்றன.
தென்னிந்திய மாநில பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கை குழு” அமைப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிற மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்துயுள்ளார். மேலும், தென்மாநில பிரதிநிதிகள் அடங்கிய கூட்டுக்குழுவை விசிக வரவேற்கிறது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.