ஜெய்ப்பூர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான் சிங் மைதானத்தில் இந்த ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ராஜஸ்தான் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 2-ல் வெற்றி, 7-ல் தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.