லாஸ் ஏஞ்சல்ஸ்: தனது நீண்டநாள் தோழியான டைலன் மேயரை திருமணம் செய்து கொண்டார் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட்.
ஹாலிவுட்டில் ‘ட்விலைட்’ படங்களின் மூலம் பெரும் பிரபலமானவர் கிறிஸ்டன் ஸ்டீவர்ட். அப்படத்தில் நடித்த ராபர்ட் பட்டின்சனை நான்கு ஆண்டுகள் காதலித்து வந்தார். அதன்பிறகு இருவருக்கும் சில காரணங்களால் பிரேக் அப் ஆனது. கடந்த 2017ஆம் ஆண்டுதான் ஒரு பைசெக்சுவல் என்று அறிவித்தார் நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட். திரைக்கதை எழுத்தாளரும் நடிகையுமான டைலன் மேயருடன் தான் ரிலேசன்ஷிப்பில் இருப்பதாக 2019ஆம் ஆண்டு கிறிஸ்டன் ஸ்டீவர்ட் அறிவித்தார். கடந்த 2021ஆம் ஆண்டு இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திக் கொண்டனர்.