விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று (ஆக. 21) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டு மேடையின் உச்சியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்ஜிஆருடன் விஜய் இருப்பது போன்ற கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது பேசு பொருளாகியுள்ளது.