கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் முக்கியமானது 3 துறைகள். பேட் டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலுமே சிறந்து விளங்கக் கூடிய அணிகள் தான் எப்போதும் வெற்றிக் கனியைச் சுவைக்கின்றன.
ஆனால், சில போட்டிகளில் மோசமான ஃபீல்டிங் காரணமாக மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்களைப் பெற்றுள்ள சிறந்த அணிகள் கூட தோல்வியைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக எதிரணிகளைச் சேர்ந்த முக்கிய வீரர்களின் கேட்ச்களை கோட்டை விடுவது அந்தப் போட்டியின் முடிவையே மாற்றி அமைக்கக்கூடும்.