சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தால் அதிமுக – பாஜ கூட்டணி ஏற்பட்டு விடும் என்று நயினார் நாகேந்திரன் (பாஜக எம்எல்ஏ) கூறி இருக்கிறார். அது அவருடைய ஆசையாக இருக்கலாம். எல்லோரும் ஆசைப்படுவார்கள். அவர் ஆசைப்படுவதை வைத்தெல்லாம் நான் சொல்ல முடியாது. ஆனால் எங்களுடைய கருத்தை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொல்லி விட்டார்.
அதனால், 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் சரி, இனி வரப்போகிற எந்த தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது என்பதே அதிமுகவின் இறுதியான முடிவு. இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை என்பதுதான் அதிமுகவின் முடிவு. நீங்கள் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்கிறீர்கள். ஆனால், அண்ணாமலை பார்த்தால் சிரித்து பேசுகிறீர்களே என்று கேட்கிறீர்கள். அரசியலில் எதிரும் புதிரும் இருக்கலாம். ஆனால் நேரில் பார்க்கும்போது ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து பேசுவதுதான் தமிழர் பண்பாடு என்றார்.
The post நயினார் நாகேந்திரனுக்கு ஜெயக்குமார் பதிலடி இப்போதும், எப்போதும் பாஜவுடன் கூட்டணி இல்லை appeared first on Dinakaran.