ரயில்வே அமைச்சகத்துடன் இணைந்து, சென்னை ஐஐடி உருவாக்கிய நாட்டின் முதல் ஹைபர் லூப் பரிசோதனை வழித்தடம் தயார் நிலையில் உள்ளது.
நீண்ட தூர பயணத்துக்கான அதிவேக ரயில் போக்குவரத்து ஹைபர்லூப் என அழைக்கப்படுகிறது. இதில் வெற்றிட இரும்புக் குழாய்கள் வழியாக, ரயில்கள் எலக்ட்ரோ மேக்னடிக் தொழில் நுட்பத்தில் காற்றின் உராய்வு இன்றி, மேக் 1 வேகத்தில், அதாவது மணிக்கு 761 மைல் வேகத்தில் செல்லும். குறைந்த எரிசக்தியில் விமானத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும். இந்த புதுமையான ரயில் போக்குவரத்துக்கான 422 மீட்டர் நீள பரிசோதனை வழித்தடத்தை ரயில்வே அமைச்சகம் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து சென்னை ஐஐடி, அதன் தையூர் டிஸ்கவரி வளாகத்தில் உருவாக்கியுள்ளது. இந்த ஹைபர்லூப் ரயில் போக்குவரத்து அமலுக்கு வந்தால் 350 கி.மீ தூர பயணத்தை அதாவது டெல்லியிலிருந்து ஜெய்ப்பூருக்கு அரை மணி நேரத்தில் செல்லலாம்.