சென்னை: நான் மட்டும் முதல்வன் அல்ல தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் முதல்வனாகவே நான் முதல்வன் திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
எது மகிழ்ச்சி?
நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் UPSC தேர்வில் தமிழ்நாட்டுத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது! இவ்வாறு தெரிவித்தார்.
The post நான் மட்டும் முதல்வன் அல்ல தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் முதல்வனாகவே நான் முதல்வன் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவீட் appeared first on Dinakaran.