முகமது ஷமி இல்லாமல் இந்திய அணியா என்ற நிலை மாறி கவுதம் கம்பீருக்கு பிறகே டெஸ்ட், ஒருநாள், டி20 என்று எந்த வடிவத்திலும் கம்பீர் – அகார்க்கர் விவாதத்தில் கூட ஷமி இடம்பெறாமல் போயுள்ளார். சர்பராஸ் கான் கொஞ்சம் முகத்தைக் காட்டிவிட்டு ஒதுக்கப்பட்டார், ஷமி நீண்ட நாள் ஆடி விட்டு இப்போது ஒதுக்கப்படுகிறார். ஆனாலும் தான் ஆடத்தயார் நிலையில்தான் இருக்கிறேன் என்கிறார் ஷமி.
இந்திய அணித்தேர்வு கடும் விமர்சனங்களுக்குள்ளாகிறது, செய்தியாளர்கள் சந்திப்பில் அகார்கராகட்டும் கம்பீராகட்டும் ஏதோ தலையீடு இல்லை என்பது போல் காட்டிக் கொள்கின்றனர். பிரஸ் மீட்டில் சப்பைக்கட்டுக் காரணங்களை கேள்விக்குப் பதிலாகக் கூறுகிறார் அகார்கர். ஹர்ஷித் ராணா ஏன் திடீரென ஒருநாள், டி20 அணிக்குத் திரும்பினார் என்ற கேள்விக்கு இன்னும் கூட நியாயமான பதில் கிடைக்கவில்லை, அதனால்தான் ஸ்ரீகாந்த் சொல்லும் ‘கம்பீர் ஜால்ரா’ கருத்தை ஏற்க வேண்டியதாயிருக்கிறது.