கோவை: கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், கோவை ரயில் நிலையம் எதிரே கீதா ஹால் ரோட்டில் உள்ள அதன் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமை தாங்கினார். இதில்,“ஒன்றிய அரசின் கல்விக்கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தாவிட்டால், தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய கல்வி நிதியை தர மாட்டோம் என மிரட்டுகிற ஒன்றிய அரசையும், அம்பேத்கரை இழிவுபடுத்தி நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், வரும் 25ம்தேதி கோவை வரும் அமித்ஷாவுக்கு அன்றையதினம் மாலை 3.30 மணிக்கு காந்திபார்க் ரவுண்டானா அருகே காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் கருப்புக்கொடி காட்டப்படும்’’ என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post நாளை மறுதினம் கோவை வரும் அமித்ஷாவுக்கு கருப்புக்கொடி: காங்கிரஸ் அறிவிப்பு appeared first on Dinakaran.