சென்னை: நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச்சில் சனிக்கிழமைகளில் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், நிதியாண்டின் இறுதி மாதம் என்பதாலும் மார்ச் 2025 மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக அனைத்து பதிவு அலுவலகங்களும்
வழக்கம்போல் காலை 10.00 மணி முதல் ஆவண பதிவு முடியும்வரை செயல்படும். மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200 முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச்சில் சனிக்கிழமைகளில் அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும்: பதிவுத்துறைஅறிவிப்பு..!! appeared first on Dinakaran.