“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என்று கூறிய திருஞானசம்பந்தர். “தண்பொருநைப் புனல் நாடு” என்று கூறியவர் சேக்கிழார். இத்தகைய சிறப்பு வாய்ந்த திருநெல்வேலி மாவட்டம் ஒரு காலத்தில் இன்றைய விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூரில் தொடங்கி தெற்கே வள்ளியூர் வரை இருந்தது.
இம்மாவட்டத்தின் தென்பகுதி தாமிரபரணி தீராவாசத்தில் பச்சைப் பசேல் என்று இருக்கும். இன்றைக்கு இம்மாவட்டம் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி என மூன்றாகப் பிரிந்துவிட்டது. இந்தியாவின் ஆக்ஸ்போர்டாக திருநெல்வேலியின் பாளையங்கோட்டை திகழ்ந்தது. இதன் வடபகுதியான கோவில்பட்டி, சங்கரன்கோவில், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் – வானம் பார்த்த கரிசல் மண் பகுதி.