ரோம்: போப் பிரான்சிஸ் சிக்கலான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். நாள்பட்ட நுரையீரல் நோய் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு போப் நன்றாக உறங்கி ஓய்வெடுத்ததாக நேற்று காலை வாடிகன் தெரிவித்துள்ளது. அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய நாட்களில் கண்டறியப்பட்ட சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு குறைந்துள்ளதாகவும், ரத்த பரிசோதனைகளில் சிறிது முன்னேற்றம் தெரிவதாகவும்,மார்பு சிடி ஸ்கேன் அவரது நுரையிரல் தொற்றுக்கான சிகிச்சை காரணமாக சாதாரண பரிணாமத்தை காட்டுவதாகவும் மருத்துவர்கள் குழு தெரிவித்துள்ளது. சனிக்கிழமைக்கு பிறகு அவருக்கு சுவாசப்பிரச்னை எதுவும் இல்லை என்றும் வாடிகன் தெரிவித்துள்ளது. அவர் ஆபத்தில் இருந்து முழுமையாக விடுபடவில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
The post நிமோனியாவில் இருந்து மெல்ல மீண்டு வரும் போப் appeared first on Dinakaran.