
நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நவிமும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால் எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய மகளிர் அணி களமிறங்குகிறது.

