எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஜெயலலிதா மற்றும் இபிஎஸ் அமைச்சரவையிலும் தனித்துவம் காட்டிய இவர் அதிமுகவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை ஏற்று வழிநடத்தியவர். ஒரு காலத்தில், ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார பயணங்களைத் திட்டமிட்டு நடத்தி சபாஷ் பெற்றவர். கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 8 முறை வென்று இன்றளவும் அத்தொகுதியின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் அமைதிப்புயலான செங்கோட்டையன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக பேட்டியிலிருந்து…..
மக்களவைத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. 7 தொகுதிகளில் டெப்பாசிட் இழந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?