புதிய மருத்துவ கல்லூரி, நீட் தேர்வு, பாஜக கூட்டணி தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் இடையே கடும் விவாதம் நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இந்த விவாதத்தை அதிமுக உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி தொடங்கி வைத்து பேசியதாவது: ஊட்டியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மத்திய அரசிடம் அனுமதி பெற்றீர்களா. இடங்களை தேர்வு செய்தீர்களா?