புதுடெல்லி: பாஜக எம்.பி.க்கள் நீதித் துறை மீது விமர்சனம் செய்தது அவர்களுடைய தனிப்பட்ட கருத்து என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு தொடர்ந்த ஒரு வழக்கில், மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து சமீபத்தில் தீர்ப்பளித்தது.