புதுடெல்லி: மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 143-வது பிறந்தநாள் விழா இன்று (டிசம்பர் 11) நாடு முழுவதிலும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரதியின் முழுமையானப் படைப்பு நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று வெளியிட்டார்.
மத்திய கலாச்சாரத் துறையின் கீழான சாகித்ய அகாடமி சார்பில் பிரதமரின் அரசு இல்லத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. கால வரிசையில் பாரதி படைப்புகள் என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்ட இந்நூல்களை சீனி விஸ்வநாதன் தொகுத்துள்ளார். இவ்விழாவில் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவாத், நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர்.எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.