சென்னை: தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் செய்யூர் – வந்தவாசி – போளூர் இடையே ரூ.1,141 கோடியில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட 109 கி.மீ. நீள சாலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: திமுக அரசு பொறுப்பேற்ற 2021 மே மாதம் முதல் தற்போது வரை, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 16,421 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.