நெல்லை: தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்றது சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோயில். இக்கோயிலில் காந்திமதி யானை கடந்த 1985ம் ஆண்டு முதல் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 56 வயதுடைய காந்திமதி யானையின் எடை 4.5 டன்னாக அதிகரித்தது. அதிக எடை மற்றும் வயது முதிர்வின் காரணமாக யானையின் பின்கால்கள் நடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தது. மருத்துவ பரிசோதனை செய்து கடந்த இரண்டு மாதங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் காந்திமதி யானைக்கு எழுந்து நிற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காந்திமதி யானை நேற்று காலையில் 7.10 மணிக்கு உயிரிழந்தது. காந்திமதி யானை இறந்த செய்தி அறிந்ததும் யானை பாகன்கள், பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இதைதொடர்ந்து கோயிலுக்கு சொந்தமான தாமரை குளத்துக்கு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்து அடக்கம் செய்யப்பட்டது.
The post நெல்லையப்பர் கோயில் யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.