நெல்லை: நெல்லை மாவட்ட பாஜ தலைவராக கடந்த பல ஆண்டுகளாக பதவி வகித்து வரும் தயாசங்கர் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். பாஜவில் உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் நெல்லை மாவட்ட பாஜ தலைவர் தயாசங்கர் அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார்.
இதுகுறித்து தன் சமூக வலைதளத்தில், “இத்துடன் பாஜ கட்சியில் என் அரசியல் பயணம் நிறைவடைகிறது. என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என குறிப்பிட்டுள்ளார். தயாசங்கர், நெல்லை பாஜ எம்எல்ஏவும், பாஜ சட்டமன்றக்குழு தலைவருமான நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post நெல்லை மாவட்ட பாஜ தலைவர் திடீர் விலகல் appeared first on Dinakaran.