திருவாரூர்: டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த மழையால் நனைந்த நெல்மணிகளை உலர்த்த முடியாமலும், விற்பனை செய்ய முடியாமலும் விவசாயிகள் தவித்து வந்தனர். இதனையடுத்து நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்த்துவது குறித்து ஒன்றிய உணவு துறை ஆராய்ச்சி பிரிவு உதவி இயக்குநர்கள் நவீன், ப்ரீத்தி, தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகிய 4 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமுன்தினம் தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 இடங்களில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். 2வது நாளாக நேற்று காலை திருவாரூர் மாவட்டத்தில் 4 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதத்தை அதற்குரிய இயந்திரம் மூலம் ஆய்வு செய்த ஒன்றிய குழுவினர், மாலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
The post நெல் கொள்முதல் நிலையங்களில் ஒன்றிய குழுவினர் 2வது நாளாக ஆய்வு appeared first on Dinakaran.