உத்தர பிரதேசம் சம்பல்வாசிகள் இடையே ஜாமியா மசூதிக்கு எந்த வண்ணம் பூசுவது என்பதில் புதிய மோதல் துவங்கி உள்ளது. இதில், முஸ்லிம் தரப்பு பச்சை நிறமும், இந்து தரப்பு காவி நிறமும், அரசு நிர்வாகம் வெள்ளை நிறமும் பூச வலியுறுத்தி வருகின்றனர்.
உ.பி.யின் சம்பலில் 1526-ல் ஷாயி ஜாமியா மசூதி கட்டி முடிக்கப்பட்டது. முகலாய மன்னர் பாபர் ஆட்சியில் கட்டப்பட்ட வட இந்தியாவின் முதல் மசூதியாக இது கருதப்படுகிறது. இதை அங்கிருந்த ஸ்ரீஹரி எனும் சிவன் கோயிலை இடித்துவிட்டு கட்டியதாக சர்ச்சை எழுந்தது. இதன் மீதான சம்பல் மாவட்ட நீதிமன்ற வழக்கில் மசூதியில் கள ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இந்தக் கள ஆய்வு நடைபெற்ற நவம்பர் 24-ல் கலவரம் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து கள ஆய்வுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.