இந்தி நடிகர் அர்ஜுன் கபூர், ரகுல் ப்ரீத் சிங், பூமி பட்னேகர் உட்பட பலர் நடிக்கும் படம், ‘மேரே ஹஸ்பண்ட் கி பீவி’. முடாசர் அஜிஸ் இயக்கும் இந்தப் படத்தை ரகுல் ப்ரீத் சிங்கின் கணவர் ஜாக்கி பக்னானி தயாரிக்கிறார்.
அடுத்த மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல் காட்சி, மும்பை அருகே செட் அமைத்து படமாக்கப்பட்டது. அப்போது திடீரென்று அரங்கின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அர்ஜுன் கபூர், இயக்குநர் முடாசர் அஜிஸ், தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி ஆகியோர் லேசான காயம் அடைந்தனர்.