வாஷிங்டன்: பணக்காரர்கள் இடையே ஆபத்தான அதிகாரக் குவியல் நிலை ஏற்பட்டுள்ளது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசி உள்ளார். டோனல்ட் டிரம்ப் (Donald Trump) அதிபராகும் நேரத்தில் பைடன் நாட்டு மக்களுக்கு அதிபராக அவருடைய கடைசி உரையை ஆற்றினார். அதில், அமெரிக்காவில் டோனல்ட் டிரம்ப் ஆட்சியில் இருந்ததைவிட தற்போது குற்றங்கள் குறைந்துள்ளது. அமெரிக்கா தோல்வி அடைந்த தேசம் என்று டோனல்ட் டிரம்ப் கூறியதற்கு அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தோற்றுப்போக வில்லை அவர் தான் தோற்றுப்போவார் என்று ஜோ பைடன் தனது வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் . உலக அளவில் வெற்றி பெற்ற நாடு என்று தெரிவித்துள்ள அவர் அமெரிக்கா வளமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதிபர் பதவியில் இருந்து ஒரு சில நாட்களில் விலகவுள்ள ஜோ பைடன் பிரியாவிடை உரையாற்றினார். ஆபத்தான அதிகாரக் குவியல் நிலை குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அமெரிக்காவில் அதிகாரம் மற்றும் செல்வாக்குடன் தன்னலக் குழு ஒன்று உருவாகி வருகிறது. தன்னலக் குழு பரப்பும் தவறான தகவல்களால் அமெரிக்க மக்கள் அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அமெரிக்க மக்கள் தங்களின் முழு அன்பையும் எனக்கு அளித்தார்
The post பணக்காரர்கள் இடையே ஆபத்தான அதிகாரக் குவியல் நிலை ஏற்பட்டுள்ளது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு appeared first on Dinakaran.