சென்னை: சென்னை மற்றும் வடமாநிலங்களில் பனிமூட்டம், மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் நேற்று சர்வதேச விமானங்கள் உள்பட 15 விமானங்கள் பல மணி நேரம் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னையில் இருந்து அபுதாபி, சிங்கப்பூர், மொரீசியஸ், சார்ஜா, துபாய், டெல்லி, கொல்கத்தா, புவனேஸ்வர், விசாகப்பட்டினம், செகந்திராபாத், அந்தமான் உள்ளிட்ட 11 புறப்பாடு விமானங்கள், அதேபோல், சென்னைக்கு வரும் விமானங்களான அபுதாபி, சார்ஜா, புனே, கொல்கத்தா ஆகிய 4 வருகை விமானங்கள் என மொத்தம் 15 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இந்த விமானங்கள் ஒரு மணி நேரத்தில் இருந்து 6 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதில் அதிகபட்சமாக புனேவில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் 6 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தது. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.
The post பனி மூட்டம், மோசமான வானிலை சென்னையில் 15 விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.