சென்னை: சென்னையில் நடைபெற்ற பன்னாட்டு புத்தக காட்சியில் மொழிபெயர்ப்பு தொடர்பாக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே கையெழுத்தான நிலையில் இந்த ஆண்டு 3 மடங்கு உயர்ந்துள்ளது. 1,125 ஒப்பந்தங்களில்
1,005 ஒப்பந்தங்கள் தமிழ் புத்தகங்களை வெளிநாட்டு மொழிகளில் |மொழிபெயர்ப்பதற்கானவை. 120 ஒப்பந்தங்கள் வெளிநாட்டு மொழி புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்கானவை. திமுக அரசு அளித்த மானியம் மற்றும் ஆதரவின் மூலம் தமிழ் இலக்கியங்கள் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெறுவதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.
The post பன்னாட்டு புத்தக காட்சியில் மொழிபெயர்ப்பு தொடர்பாக 1,125 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!! appeared first on Dinakaran.