சென்னை: பருவகால நோய்கள் அனைத்து காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க தமிழக பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
டெங்கு, இன்ஃப்ளூயன்சா உள்ளிட்ட தொற்றுகள் மழை மற்றும் குளிர் காலங்களிலும், வெயில் காலங்களில் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி, அக்கி போன்றவைகள் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். கடந்த சில ஆண்டுகளாக இந்த நிலை மாறி அனைத்து கால நிலைகளிலும் எல்லா விதமான தொற்றுகளும் பரவி வருகின்றனர். குறிப்பாக குளிர் மற்றும் மழைக் காலங்களில் அம்மை பாதிப்பு அதிகரித்துள்ளது.