புதுடெல்லி: ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் பரோலில் தப்பிச் சென்றார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் சிதி கிராமத்தை சேர்ந்தவர் அனில் குமார் திவாரி (58). ராணுவத்தில் டிரைவராக பணியாற்றி வந்த இவர் கடந்த 1989-ல் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு அவரது உடலுக்கு தீவைத்தார். இதையடுத்து மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினார். எனினும் உண்மை வெளிப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.