மத்தியில் ஆளும் பாஜக-வும் மாநிலத்தை ஆளும் திமுக-வும் தான் எங்களின் எதிரிகள் என பிரகடனம் செய்திருக்கும் நடிகர் விஜய், தனது தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணிக்கும் தயார் என அறிவித்திருக்கிறார். தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற விஜய்யின் அந்த கொள்கை முடிவுக்கு தற்போது ஆபத்து வந்திருக்கிறது.
அரசியல் எதிர்காலம் கருதி இந்த விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டிய நிலை வந்துள்ளதால் கொள்கையா, கூட்டணியா என்று முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் விஜய் இருப்பதாக கூறுகிறார்கள்.