20 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் தமிழ்நாடு காவல்துறையின் வரலாற்றில் ‘பவரியா’ கும்பல் வழக்கு இன்றளவும் பேசப்படுகிறது. ‘வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களைக் காவல்துறை நெருங்கியது எப்படி? கொள்ளை போன நகைகளை காவல்துறை மீட்டதா?’ என்பதை அறிவதற்கு தனிப்படைக்குத் தலைமை தாங்கிய எஸ்.ஆர்.ஜாங்கிட்டை பிபிசி தமிழ் சந்தித்துப் பேசியது.

