பாகிஸ்தானின் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இந்த சூழ்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் அட்டோக் மாவட்டத்தில் பாயும் சிந்து நதி பகுதியில் ரூ.80 ஆயிரம் கோடி மதிப்பிலான தங்க படிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டு மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.