இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாண இந்து அமைச்சர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தான், சிந்து மாகாணத்தில் மத விவகாரங்களுக்கான இணை அமைச்சராக இருப்பவர் கியால் தாஸ் கோஹிஸ்தானி. இவர் நேற்று முன்தினம் தட்டா மாவட்டத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் கால்வாய் அமைக்க கோரி போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கியால் தாஸ் அந்த பகுதியை கடக்கும் போது போராட்டக்காரர்கள் திடீரென தக்காளி, உருளை கிழங்குகளை எடுத்து வீசி தாக்குதல் நடத்தினர். இதில், அமைச்சர் காயம் எதுவும் இன்றி தப்பினார்.
அவருக்கு காருக்கு பின்னால் வந்த வாகனங்கள் தாக்குதலுக்கு இலக்காயின. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கியால் தாஸிடம் ஷெரீப் பேசியுள்ளார். மேலும் மக்களின் பிரதிநிதிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே போல் சிந்து முதல்வர் சையத் முராத் அலி ஷாவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
The post பாகிஸ்தானில் இந்து அமைச்சர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.