ராவல்பிண்டி: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் (72), தெஹ்ரிக் இ இன்சாப் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்றார். கடந்த 2022-ம் ஆண்டு தேர்தலில் இம்ரான் கான் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றாலும், ராணுவ நெருக்கடி மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அவரது ஆட்சி பிறகு கவிழ்க்கப் பட்டது.