புதுடெல்லி: "பாஜக ஆட்சிக்கு வந்தால், டெல்லியில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் அக்கட்சி அழித்துவிடும்" என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எச்சரித்துள்ளார்.
வடக்கு டெல்லியில் உள்ள ஷகூர் பஸ்தியில் உள்ள குடிசைப் பகுதியில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், “பிப்ரவரி 8ம் தேதி தேர்தல் முடிவடைந்த உடனடியாக இந்தக் குடிசைகள் அழிக்கப்படும். அவர்கள் இரண்டு நாட்கள் கூட காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் டெல்லியில் உள்ள அனைத்து குடிசைப் பகுதிகளையும் அழிக்கத் திட்டமிட்டுள்ளனர். ஐந்து ஆண்டுகளை மறந்துவிடுங்கள், ஒரு வருடத்திலேயே அவர்கள் அனைத்து குடிசைகளையும் இடித்துவிடுவர். டெல்லி குடிசைவாசிகள் பாஜகவுக்கு வாக்களித்தால் அது அவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம். அனைத்து குடிசைகளையும் தனியார் வசம் ஒப்படைக்க ஏற்கெனவே பாஜகவினர் திட்டமிட்டுவிட்டனர்.