புதுடெல்லி: பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவாக ரூ.1.51 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதுகாப்பு உற்பத்தி 2024-25 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.1,50,590 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த மைல்கல் முந்தைய நிதியாண்டின் உற்பத்தியான ரூ.1.27 லட்சம் கோடியை விட 18% வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்த மதிப்பு ரூ.79,071 கோடியாக இருந்தது என்பதைக் கணக்கில் கொண்டு பார்க்கும் போது 90% அதிரடியான வளர்ச்சியைக் குறிக்கிறது.