
நாடு முழுவதும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். தொழிலாளர் வருங்கால் வைப்பு நிதி எனப்படும் இந்த இபிஎஃப்ஓ விதிகளில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையிலான மத்திய அறங்காவலர் குழு (CBT), அண்மையில் சில புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. EPFO 3.0 எனப்படும் இந்தப் புதிய விதிகள்தான் பல்வேறு விமர்சனங்களை ஈர்த்துள்ளது
காரணம், பிஎஃப் பணத்தில் இருந்து 75% மேல் எடுக்க இயலாது, குறைந்தபட்ச வைப்புத் தொகை (minimum balance) இருக்க வேண்டும் என்ற உள்ளிட்ட நிபந்தனைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அதேபோல், பணி இழந்தவர்கள் அவர்கள் பிஎஃப் பணத்தை முழுவதுமாக எடுக்க முடியாது போன்ற விதியும் உள்ளது. பணி இழந்தவர்களுக்கு பெரிய பலமாக இருக்கக் கூடிய பிஎஃப் பணத்தை முழுவதுமாக எடுக்க முடியாத வகையில் விதிகளை வகுத்திருப்பது தொழிலாளர்களில் பணத்தை அரசாங்கம் திருடுவதற்குச் சமம் என்ற விமரசனம் எழுந்துள்ளது.

