புதுடெல்லி: பிசிசிஐ தலைவராக பதவி வகித்து வந்த ரோஜர் பின்னி 70 வயதை எட்டியதை தொடர்ந்து கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பிசிசிஐ சட்டவிதிகளின்படி 70 வயதை கடந்தவர்கள் பதவியில் தொடர முடியாது என்பதால் இந்த முடிவை ரோஜர் பின்னி மேற்கொண்டிருந்தார். இதற்கிடையே அடுத்த பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படக்கூடும் என ஊகங்கள் எழுந்தன. இந்நிலையில், வரும் 28-ம் தேதி மும்பையில் பிசிசிஐ ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட உள்ளார்.