சென்னை: ‘காமிக் கான் – இந்தியா’ நிகழ்வு மீண்டும் சென்னையில் நடைபெறுகிறது. இந்த முறை முன்னெப்போதையும் விடவும் சுவாரசியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையம் இந்த நிகழ்வு வரும் 8 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. மாருதி சுசுகி அரேனா சென்னை காமிக் கான் 2025, க்ரஞ்சிரோல் மூலம் இயக்கப்படுகிறது. காமிக்ஸ், அனிமே, கேமிங், சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் மற்றும் இடையில் உள்ள அனைத்தும் அடங்கிய மறக்க முடியாத அனுபவங்கள் நிறைந்த இரண்டு நாள் நிகழ்வாக இது இருக்கும் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.