‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்திற்கான மொத்தச் செலவு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் என்று அரசே தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. பின்னர், திட்ட செலவு அதிகரிப்பு குறித்து இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அரசு அறிக்கை ஒன்றை அளித்திருந்தது. இதனால், பிரதமரின் புதிய இல்லம் கட்டுவதற்கான செலவு எவ்வளவு? அங்கே என்னென்ன வசதிகள் செய்யப்படும்? என்பன போன்ற கேள்விகளை ஆர்டிஐ வாயிலாக பிபிசி எழுப்பியிருந்தது. அதற்கு மத்திய அரசு அளித்த பதில் என்ன?

