ஹைதராபாத்: பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்பனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழில் பிரபல பாடகியாக இருப்பவர் கல்பனா. இவர் ஹைதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக கல்பனாவின் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்ட காவலாளி, இது குறித்து குடியிருப்பில் வசிப்பவர்களிடம் தெரியப்படுத்தியிருக்கிறார்.