கொல்கத்தா: பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங்குக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது என்று அந்த அணியின் சுழற்பந்து பயிற்சியாளர் சுனில் ஜோஷி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் கொல்கத்தாவில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் மழையின் காரணமாக ரத்தானது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.