செக்குடியரசின் பிராக் நகரில் பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் கடைசி மற்றும் 9-வது சுற்றில் இந்திய கிராண்ட் மாஸ்டரான அரவிந்த் சிதம்பரம், துருக்கியின் குரேல் எடிஸுடன் மோதினார். கருப்பு காய்களுடன் விளையாடிய அரவிந்த் சிதம்பரம் 39-வது நகர்த்தலின் போது ஆட்டத்தை டிராவில் முடித்தார். இதன் மூலம் 6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து பிராக் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் அரவிந்த் சிதம்பரம் சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தத் தொடரில் அரவிந்த் சிதம்பரம் ஒரு முறை கூட தோல்வியை சந்திக்கவில்லை. மொத்தம் நடைபெற்ற 9 சுற்றுகளில் 3 வெற்றி, 6 டிராக்களை பதிவு செய்திருந்தார். மற்றொரு இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா 2-வது இடம் பிடித்தார். அவர், கடைசி சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியுடன் மோதினார். இதில், 40-வது நகர்த்தலின் போது பிரக்ஞானந்தா தோல்வி அடைந்தார்.