சென்னை: பிரிட்டிஷ் ராலி சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தின் 2025-ம் ஆண்டு சீசனில் எம்ஆர்எஃப் அணி இணைந்துள்ளது. மேலும் இந்த தொடருக்கு தேவையான அனைத்து டயர்களையும் விநியோகம் செய்யும் உரிமையையும் எம்ஆர்எஃப் பெற்றுள்ளது.
ஐரோப்பிய ராலி சாம்பியன்ஷிப்பில் ஆதிக்கம் செலுத்திய எம்ஆர்எஃப் டயர்ஸ் அணி தற்போது இங்கிலாந்தில் தங்களது திறனை வெளிப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது. இந்தத் தொடரில் எம்ஆர்எஃப் அணியின் சவாலை ஓட்டுநர்கள் ஜேம்ஸ் வில்லியம்ஸ், மேக்ஸ் மெக்ரே ஆகியோர் வழிநடத்த உள்ளனர்.