ரியோ டி ஜெனிரோ: இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-யும் இரு தரப்பு உறவை மேம்படுத்துவது தொடர்பாக பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் பேச்சுவார்த்தை நடத்தினர். ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் G20 உச்சி மாநாட்டின் இடையே, இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஜெய்சங்கர், "இந்தியா – சீனா எல்லைப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சமீபத்திய முன்னேற்றம் குறித்து நாங்கள் ஆராய்ந்தோம். மேலும், இருதரப்பு உறவுகளின் அடுத்த படிகள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொண்டோம். அதோடு, உலகளாவிய நிலைமை குறித்தும் விவாதித்தோம்" என்று கூறியுள்ளார்.