
பாட்னா: மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
இதனையொட்டி பிரதமர் மோடி அக்.24-ல் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இது குறித்து பாட்னாவில் இன்று (ஞாயிறு) செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால், “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் பிரச்சாரத்தை தொடங்குகிறார். இந்த மாத இறுதிக்குள் 4 பிரச்சாரப் பேரணிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வரும் 24-ம் தேதி சமஸ்திபுராவில் பிரச்சாரம் செய்கிறார். அன்றைய தினமே, பெகுசராயில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.” என்றார்.

