புதுடெல்லி: வருமான வரி விகிதங்கள் தொடர்பாக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் புதிய மசோதா அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிதித்துறை நிபுணர்கள் கூறியதாவது: புதிய வருமான வரி விகிதத்தில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.12 லட்சமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. முழுமையான விரி விகிதங்கள் தொடர்பாக புதிய மசோதா ஒரு வாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று பட்ஜெட் உரையின்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த மசோதா குறித்து கடந்த பட்ஜெட்டின்போதே அமைச்சர் சுட்டிக் காட்டினார்.