மும்பை: ஊழியர்கள் வாரத்துக்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் அண்ட் டி நிறுவன தலைவர் எஸ்.என்.சுப்ரமண்யத்தின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சிவ சேனா கட்சி (உத்தவ் அணி) எம்.பி., பிரியங்கா சதூர்வேதி, "இது நவீன யுக அடிமைத்தனத்தை அரங்கேற்றும் முயற்சி" என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரியங்கா சதுர்வேதி வெளியிட்டுள்ள பதிவில், "பெண் வெறுப்போடு இருப்பதோடு மட்டும் இல்லாமல், இந்தக் கூற்று இந்தியாவின் புதிய யுக அடிமைத் தனத்தை அரங்கேற்ற விரும்புவதையே குறிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். அத்துடன் எஸ்.என்.சுப்ரமண்யத்தின் 90 மணி நேர வேலை குறித்த செய்தியையும் சுட்டிக்காட்டும் படத்தினையும் பகிரந்துள்ளார்.